கற்றலின் படியே காசினி உயர்வே

ராணி சம்பந்தர் வையத்தில் வாழ்விற்கு கல்வியே உயர்வு தருமே பையப் பையவே போகும் பாதையில் நெருங்கிடும் தடைக்கற்கள் உடைத்திட அது பல்கிப்...

Continue reading

கற்றலின் படியே காசினி ௨யர்வே

வஜிதா முஹம்மட் கற்றலின்நெஞ்சுக்குள்ளே..காரி௫ள் அகன்றி௫க்கும் கல்வியின் வழிஒழுகி..நுண்ணறிவு வீற்றிருக்கும் அறிவின் சிந்தனை ஆற்றலாம் அறியாமை இ௫ள்விழகி மேலோராய் வாழ்வதே...

Continue reading

கற்றலின் படியே காசினி உயர்வே

ராணி சம்பந்தர்

வையத்தில் வாழ்விற்கு
கல்வியே உயர்வு தருமே
பையப் பையவே போகும்
பாதையில் நெருங்கிடும்
தடைக்கற்கள் உடைத்திட
அது பல்கிப் பெருகுமே

அயர்வு, சோர்வு இன்றி
கண்டதெல்லாம் கற்றிட
பல படி ஏறிடத் தோல்வி
அகன்று வெற்றி தேடி
நாடி வருமே

கருவறையில் சிசுவுடனே
தாய் பேசும் சொல் மொழி
கேட்டு ஞான அறிவு கூட
உயிர் உடலோடு சேரவே
வளர வளர ஒளி பரப்புமே

படிக்கப் படிக்க படிப்பறிவு
சுற்றும் சமூகம் ,பற்றும்
குழந்தைகள் அதனைக்
கற்று விருதுகள் பெற்று
உதவ உற்றார் உறவினர்
மனம் நிறைய வாழ்த்திட
கற்றலின் படியே காசினி
உயர்வே .

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading