14
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே..
🎙️ வியாழன் கவிதை நேரத்திற்காக…2405
🌹📚 கற்றலின் படியே காசினி உயர்வே! 📚🌹
கருவறையில் கைகால்கள்...
கற்றிட்ட மனிதரை உலகமே துதிக்கும்
கல்லாத மனமெல்லாம் இருளினில் தவிக்கும்
கற்றலால் காசினி உயர்ந்திடும் பாரடா
பெற்றதை நீயும் பெருமைகள் சேரடா
ஏட்டினில் கற்றவை ஏணியாய் அமையும்
நாட்டின் நலனுக்காய் பயனாக்கு அதையும்
கண்களாக கல்வியும் பார்வையும் தெளியும்
எண்ணத்தின் தெளிவிலே நன்மைகள் பொழியும்
களவாட முடியாது கற்றிட்ட செல்வத்தை
அளவிட முடியாது கடல்போல உள்ளதை
காலத்தை வெல்வது அறிவெனும் கலையே
ஞாலத்தில் ஓங்கட்டும் கல்வியின் நிலையே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.