கற்றலின் படியே காசினி உயர்வே
கற்றலின் படியே காசினி உயர்வே
கற்றலின் படியே காசினி உயர்வே..
🎙️ வியாழன் கவிதை நேரத்திற்காக…2405
🌹📚 கற்றலின் படியே காசினி உயர்வே! 📚🌹
கருவறையில் கைகால்கள் முளைத்து,
மெல்லவே உருவாகி,
மண்மேலே பிறந்து,
தாய் மடியில் தவழ்ந்து,
மெல்லக் காலூன்றி எழுந்து,
மனிதனாய் நிமிரும்
வாழ்க்கையடி பெண்ணே!
பள்ளிக்கூடம் துள்ளிச் சென்று,
பாலபாடம் முதல்
கணினிக் கல்வி வரை,
காலத்தின் ஓட்டத்தைக் கற்று,
கண்டங்களின் மாற்றத்தைக் கண்டு,
நாடுகளின் விரிசல்களை அறிந்து,
கற்றிடு பெரும்படி!
போட்டா போட்டிகளும்
பொறாமைகளும்
இடித்துப் பின்தள்ளும்
இவ்வுலகில்,
ஆணென்றும் பெண்ணென்றும்
இத்தனை பேதமடி!
கற்றுத் தெளிவதற்கு
ஒற்றைக் காலில் நிற்கும்
பிடிவாதம் வேண்டாமடி!
உன் சொந்தக் காலில்
நீ நிற்பதற்காய்,
அறிவுக் கண்ணைத் திறந்திடு பெண்ணே!
கல்வியென்னும் ஆயுதத்தைக்
கையில் ஏந்திடு பெண்ணே!
கற்றலின் படியே
காசினி உயர்வே!
பெற்றதின் படியே
பெருமை நிலைக்குமே!
உற்றவர் உறவுகள்
உன்னை மதிக்க வேண்டுமென்றாலும்,
பெண்ணுக்குக் கற்றல் என்பதே
உயர்வென
உரைத்துவிடு பெண்ணே!