Selvi Nithianandan

மிளகாய் (521)
காய்கறிகளில் ஒன்றானாய்
காரத்தின் அதிகரிப்புக் சிறப்பானாய்
உணவிலும் மருந்திலும் பயனானய்
உலகிலே முப்பத்திரண்டு வகையானாய்

ஆறாயிரம் ஆண்டிற்கு முன்பே
ஆராய்வில் கண்டு பிடிப்பானாய்
அதிகளவில் உற்பத்தியில் இருப்பானாய்
ஏற்றுமதி இறக்குமதி பங்கானாய்

பலவகை இனங்களாய் இருக்கின்றாய்
இனிப்பாய்,காரமாய்,மிதமானதாய்
இடைப்பட்ட காரமாய் .அதீத காரமாய்
இப்படியும் இன்றும் பலவகையாய்

நீளமாய், குறிகியும், அகன்றும், ஒடுங்கியும்
வட்டமாகவும் பல்வேறு வடிவங்களானாய்
விற்றமீனாய் கரோடீனாய் சத்தானாய்
உலகிலே சுகோவில் அளவு முறையானாயே

Nada Mohan
Author: Nada Mohan