இரா.விஜயகௌரி.

புதிருக்குள் புதிர் எழுதி விடுகதையா வாழ்க்கை
புதருக்குள் புதையல் வைத்து
புதினமெல்லாம் மறுத்து. மறைத்தெழுதி
புலனாகா விடுப்பெழுதும் வாழ்வா ஈது

நெறிமுறைகள் வகுப்பவர் யார்
நீதி மொழி. உரைப்பவர். யார்
எவர் மொழியில் நீதி வெல்லும்
ஈதுரைத்து இயல்பாய். சொல்வார் யார்

அவருக்கும் இவருக்கும் பயந்தெழுதி
அவலட்சண மூட்டைகளால் நிரப்பி
அர்த்தமின்றி. நாம் நடக்கும் பாதைக்கு
வாழ்வுப் புத்தகத்தில் ஏது. பெயர்

நிம்மதி தொலைத்த நெடுகணங்கள்
கண்ணீரால் நிரம்பியழும் விழி மடல்கள்
ஒப்பனைகள் மட்டுமிங்கே. உலகுக்கு
உண்மைப்பேரொழியோ. கும்மிருட்டில்

யாருக்கு. எதற்கு எவருக்காய்
போலி. வேடமிட்ட நாடகதாரிகளாய்
இன்னமுமேன் வீட்டினுள். முடக்கம்
சிறுபறவை பறந்து வெகு நாளாயற்றே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading