எதிர்கால உலகம்

ராணி சம்பந்தர் 26.09.24 ஆக்கம் 331 எதிர்கால உலகம்

26.09.24
ஆக்கம் 331
எதிர்கால உலகம்

சதிராட்ட அக்கிரமங்கள்
பதிவிட்ட பழக்கங்கள்
பயிரிட்டுக் குளிர் காய்ந்த அரசியல்வாதி
ஆட்டங்கள் பரகசியக்
கூண்டில் அடைப்பு

புதிரிட்ட சவால்கள்
வித்திட்ட வாக்காளர்
கடந்திட்ட காலமதில்
கண் துடைப்பு

சத்துணவே இல்லை
பத்துமாத சிசு பால்
இன்றிப் பரிதவிப்பு
பச்சிளம் பாலர் நீர்
அருந்திப் பசி பட்டினித்
துடிப்பில் தவிப்பு

நச்சுப் போதை மருந்து,
மதுவும்,ஊசியும்
முழு மூச்சாய்க் குவிப்பு

முடங்கிப் போன கனவு
மடங்கிய நினைவுகள்
அடங்கி ஒடுங்கிடாது
சிறகு விரித்துப் பறக்க
எதிர்கால உலகம்
வெளிச்சமுடன் கண்
திறக்கிறதே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading