தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சாதனை விருது

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-41
07-11-2024

சாதனை விருது

பாமுகம் எனும் தளத்தினிலே
பல முகத்தை இணைத்ததிலே
தாய் மொழியை தக்க வைக்க
தன்னால் இயன்றதை நாட்டி வந்தார்.

நட்டமரம் பல கிளைவிட்டன
நாட்டமற்றவை அறியாமையே
விட்ட இடத்தில் எமை செதுக்கி
வீரியம் தந்த ஆசானே!

உயரிய பண்பு துணைவிக்கும் இங்கே
ஊக்கம் கொடுப்பது இவரது நோக்கமும்
புலர்பெயர் நாட்டில் தமிழ்பேச்சு சாதனை
புரிந்தது சாதனைக்கு மேலிங்கு தாங்கள்.

கனவுகள் யாவும் கல்வெட்டாகி
காண வேண்டும் சரித்திரம் இங்கே
உயரிய உங்கள் நோக்கமிங்கே
உலகிற்கு தெரியட்டும் அருமை என்று!

உண்மையை உரைத்து வாழ்த்துகின்றோம்
உங்கள் பாமுகத்தில் எம்முகமும் என்று
உயர உயர வாழ்த்துகின்றோம்
வாழிய வாழிய வாழியவே..

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading