05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
ஜெயம் தங்கராஜா
கவி 709
கைக்குள் கையாய் கைதொலைபேசி
அடிமையாக்கி தனக்குக் கீழே வைத்தாலென்ன
படிப்படியாக தூக்கத்தை தினமும் தொலைத்தாலென்ன
நேரத்தை தின்றுமுழுங்கி ஏப்பம் விட்டாலென்ன
பாரதூரமான கருவியிதென யாரும் திட்டினாலென்ன
காலையில் எழுந்தவுடன் கைக்குள்ளே அடங்குமிது
மாலை கடந்தாலும் நட்போ முடங்காதது
உறவுகளும் தாராத அப்படியொரு சந்தோசம்
திறந்துவிட பக்கங்களை வாழ்நாள் சுகம்பேசும்
கையாள தெரிந்தவர்க்கு வாழ்க்கையிலே வரம்
கையளவாய் இருந்துகொண்டு உலகளவைத் தரும்
நோக்கியா முதற்கொண்டு சம்சுங்வரை நன்மையதே
போக்கிய நாட்களுக்குள் பெற்றதென்றால் உண்மையதே
சாபமென்று சொல்பவர்கள் பாவிக்கத் தெரியாதவர்கள்
பாவமவர்கள் நாகரீக உலகத்தை புரியாதவர்கள்
அளவோடு அறிவியலை பயன்படுத்துவார் அறிவுடையார்
பலனற்ற தேடல்களை தேடுபவர் அறிவடையார்
ஜெயம்
01-02-2024
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...