பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

திருமதி .அபிராமி கவிதாசன்.

28.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு மாதம்
116…
தலைப்பு !

“நீர்க்குமிழி”
கண்ணாடி பளபளப்பில்
கண்சிமிட்டும் நீர்க்குமிழி
கண்ணிமைக்கும் நொடியினில் கரையுமுன்
காட்சியே //

வண்ண வண்ண குமிழிகள் வானவில்
நிறத்தினில்
வட்டவடிவில் வலம்வரும் விளையாடி காற்றினில் //

எண்ணத்தில் உடையப் போகும் ஏக்கமும் இல்லாது
எண்ணற்ற குமிழிகள்
எழிழுடன் தோன்றுமே //

மண்ணை தொட்டதும் மரணம் என்பதை
மனமும் அறியும்
மகிழ்ந்து மடியும் //

Nada Mohan
Author: Nada Mohan