வரமாகும் வாய்ப்புகள்

சக்தி சிறினிசங்கர்
போட்டியுமே இல்லா பொறுமை வேண்டும்
பொசுங்கிடாத வாழ்வைப் போற்ற வேண்டும்
கூட்டினிலே வாழும் குருவி கூட
குவலயத்தில் பறந்து குதிக்க முனைப்பைக்
காட்டிடுமே தனது கடுமையான உழைப்பை
கண்காணி அதனைக் கண்டால் கருணை
காட்டிடுவர் கதவைத் திறக்கக் குருவி
கானமும்தான் பாடிக் களிப்பில் மகிழும்!
தரமான வாழ்வைத் தக்க வைக்க
தளங்களையும் தேடிப் போக வேண்டும்
சிரமமெனப் பாரா சிறகை அடித்து
சிந்தனையை விரிக்கச் சீரும் சிறப்பும்
வரமாகும் வாழ்வில் வசந்தம் வீசும்
வாய்ப்புகளை நழுவ விடாது நாமும்
அரமாக நாளும் அறிவைத் தீட்டி
அவனியைத்தான் ஆண்டு கொள்ள லாமே!
நன்றி வணக்கம்!

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading