வசந்தா ஜெகதீசன்

உலகின் நிலைமாற
என்னென்ன கொண்டு வருகிறாய்….
உருண்டோடும் ஆண்டே
உலகாளும் வனப்பே
ஆண்டாண்டாய் நீயும்
அவனிக்கு விளக்கே
ஆதாரம் காட்டும் காலத்தின் மிடுக்கே

ஏற்றமாய் உழைப்பிட
மங்காப் புகழினை
மதிநுட்பத் திறனினை
தங்குதடையற்ற தைரிய வாழ்வினை
ஊக்குசக்தி உலகவிருத்தியாய்
தாங்கும் தரணிக்கும்
ஏங்கும் வாழ்விற்கும்
ஏதுகை எதுவோ
ஏற்றமே விளைவோ

மறுமலர்ச்சியின் ஆண்டாய்
மதிநுட்பத் திறனாய்
அதியுயர் விருதின்
அட்சய புவியாய்
வளர்மதி நிறைக்க
வான்புகழ் தளிர்க்க
என்னென்ன கொண்டு வந்தீர்
புத்தாண்டே மலர்க! புவிச்சரிதம் உயர்க!
நன்றி
மிக்கநன்றி

ஏற்றமிகு எழுகையும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading