அது அந்தக்காலம் இது இந்தக்காலம்

ஜெயம்

இயற்கையோடு உறவாடி இயற்கையாக வாழ்ந்தது அந்தக்காலம்
செயற்கையை நுழைத்து உண்மையாய் செயற்படாமல் வாழ்வது இந்தக்காலம்
மனித சக்தியால் உழைத்து நீடூழி வாழ்ந்தது அந்தக்காலம்
இயந்திரத்தின் கடுகதிக்குள் சிக்கி சீரழிந்து வாழ்வது இந்தக்காலம்

நூலகம் தேடிச்சென்று ஞாபகப்படுத்தும் அறிவைப்பெற்றது அந்தக்காலம்
இணையவழியாக விழியினைக்கெடுத்து அறிவை அடைவது இந்தக்காலம்

சொந்தம் பந்தமென கூடிய கூட்டு வாழ்க்கை அந்தக்காலம்
தனிமையும் வெறுமையும் துணையாக தவிச்சு வாழுவது இந்தக்காலம்
காதலையும் மானத்தையும் உயிராய் நினைத்தது அந்தக்காலம்
பணத்தை கண்டுவிட்டால் அலைபாயும் உறவுநிலை இந்தக்காலம்

வாழ்க்கை துணையை பெற்றோர் தேடுவார் அந்தக்காலம்
வாழ்க்கை துணைசொல்ல, பெற்றோர்கள் வாயோதிபமடத்தில் இந்தக்காலம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading