அது ஒரு கனாக்காலம் (723)

அது ஒரு கனாக்காலம் Selvi Nithianandan

அறியாத வயது
புரியாத போது
தெரியாதநோயால்
இழந்தேனே தந்தை

கஷ்டம் என்பது
எம்மை துரத்த
கண்ணீர் சொட்ட
கவலையை நிறுத்த
மெளனமே காத்த
மங்கையாய் நானும்

மண்குடிசை வாழ்வு
மகிழ்ச்சியே அன்று
மண்ணை இழந்து
தனித்து இன்று

வசதிகள் இன்று
அசதியும் அதிகம்
காலமும் மாறி
கோலமும் இழந்ததே மிச்சம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading