அன்னைக்கு நிகருண்டோ அவனியில்

அன்னைக்கு நிகருண்டோ அவனியில்.
அம்மா..!
அம்மாவின் கருவறையில்
நாங்கள் தெய்வம்
ஆலயத்தின் கருவறையில்
அம்மா தெய்வம்

உயிரோடு உடல் தந்தாள்
உலாவ விட்டாள்-தமிழ்
உணர்வோடு உணவு தந்தாள்
உயர வைத்தாள்.

இருள் வந்து சூழும் போது
நிலவாய் நின்றாள்
எமை வளர்த்து மரமாக்க
வேராய்ச் சென்றாள்

உறக்கமின்றி எம்மவர்க்கு
உயர்வைத் தந்தாள்
உழைத்துழைத்து- உலகத்தில்
ஓடாய்த் தேய்ந்தாள்

தனைமறந்து எமக்காக
வாழ்ந்த தாயை-அவள்
தந்த உயிர் பிரியுமட்டும்
நிறுத்தி வாழ்வோம்.
அம்மாதான் நேரில் கண்ட
அன்புத்தெய்வம்
அதைவிடவும் ஆலயங்கள்
தேவையுண்டோ..

-பசுவூர்க்கோபி-
நெதர்லாந்து.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading