அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…….

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே..கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.05.2024

உயிர்தந்த தாயும்
உலகைக் காட்டிய தந்தையும்
என் வாழ்வின் பொக்கிசங்கள்
நிஜ உலகின் தெய்வங்கள்
நித்திலத்தின் முத்துக்கள்
பெரு வரமாய் கிடைத்த மகுடங்கள்
நிகரென்று சொல்வதற்கு
எதுவுமில்லை அவனியிலே !

தன்னம்பிக்கையின் பெரு விருட்சமாக
தன்னலமற்ற தியாகியாக
அர்ப்பணிப்பின் தேவதையாக
படைப்பின் சக்தியாக அவளே அரசாட்சி
இமயமாய் நாம் உயர – தன்னை
உபயம் செய்தவள் அன்னையே
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லையே !

தொப்பூழ்க் கொடியில் நேசத்தைக் காட்டி
மழலைப் பருவமதில் மடியினில் சுமந்து
பள்ளிக் காலமதில் பற்பல கருமங்களாற்றி
பருவ வயதினில் பெருமிதம் கொண்டு
கடைசி வரைக்கும் நெஞ்சினில் சுமந்த
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லை
அவனியில் அன்னை ஓர் அதிசயமே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading