இணையமே நீ இல்லையெனில்

சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது வீச்சுடன் கவிகள்
காதுகள் கேட்குதே காணீர்!
விரிந்ததே உலகமும் பரந்து
வீறுடன் பயணமும் தொடர
அரியதோர் இணையமும் தானே
அறிவியல் சாதனம் ஆச்சே
கரிசனை கொள்ளவே வேண்டும்
கண்டதும் கற்றிட வேண்டாம்
மரித்தலும் ஆகுமே மாந்தர்
மயங்கவும் செய்யுமே இணையம்!
நன்றி வணக்கம்!

Author: