அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

இது எல்லாம் இப்போ எங்கே

இரா.விஜயகௌரி

காற்றின் இடைவெளியில் நின்று
கனிந்து மலர்ந்தெழுதும் அன்பின்
பாசக்கரங்களிடை பகிர்ந்து மகிழ்ந்தெழுத
ஓசைக்குரல்களெங்கே. உயிர்மூச்சை தேடுகின்றேன்

ஆசைக்குரலிழைய அன்பின் மொழி தொடுத்து
உறவுப்பின்னலிட உயிர்ப்பின் மொழித்தொடுகை
உதிரத்திசுக்களெல்லாம் ஊடுருவிப் பாய்ந்தெழுந்த
வேசக்குரல்களற்ற அயல் உறவைத்தேடுகின்றேன்

விரலிழைவின் அசைவிசைவில் மனம்
பேசிக்கதை பகிர்ந்து வாழும் காலமெல்லாம்
வளம் கொழிக்க வார்த்தை தைத்த
காகிதக் காவியத்தை கடிதமாய்த் தேடுகின்றேன்

ஓசை நயமுமில்லை உயிர்த்துடிப்பின் வேகமில்லை
நாளும் தனித்துவமாய் வாழும் மனிதர் கண்டீர்
இவர் சுயநலக்கூட்டத்திள்ளே முகமூடியிட்டெளவே
கூவி அணைத்திழைந்த. குயில் கூட்டத்தைத் தேடுகின்றேன்

தொலைத்த பல புதையல் நெஞ்சக்கூட்டசைய
பொன்னில் எழுதி வைத்த பொக்கிஷ நினைவுகளை
காணக்கிடைக்காதிந்த பாலைவனமிருந்து
நாளும் நாளுமிங்கே நயமுறத் தேடுகின்றேன்

Nada Mohan
Author: Nada Mohan