இனிவரும் காலம்..

வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்—
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய் ஆகிடும்
வன்மம் பெருகிடும் வாஞ்சை மறைந்திடும்
அன்பும் பாசமும் அடியோடு அகன்றிடும்
இன்பம் இருண்டிடும் துன்பம் துலங்கிடும்
தொடர்பாடல் குன்றிடும் உறவு மறைந்திடும்
உலகம் சுருங்கிடும் இனிவரும் காலம்
இனிக்குமா? இருளுமா?
காலத்தின் தோழனாய் கைத்தொலைபேசி
நேரத்தைப் போக்கிடும் நியாயத்தின் வாதி
தூரமே நேசமாய் பாசங்கள் வேசமாய்
துலங்கிடும் காட்சியில் மனிதங்கள் தொலையுது
நாட்களை புதைக்குது நட்பினைச் சிதைக்குது
தேடலை தேக்கியே தேவையைப் பெருக்குது
நன்றும் தீதும் உள்ளதை உராய்ந்து நம்மை நாமே புடமிடல் நன்றே!
நன்றி 10.11.25

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading