மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

ஈர் இருபத்திரண்டாய்…

வசந்தா ஜெகதீசன்
அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள்
சான்றுரைத்து நிமிர்ந்த நின்று
சாலவும் சிறப்புரைத்த
யாழ்நூலகமே
ஈர் இருபத்திரண்டாண்டாய்
அனலாகி அழிந்ததே
அறிவாலயம் எரிந்ததே
துட்டர்கள் செயலாலே
துயர்தந்த வதையிது
வரலாற்று நூல்கள் வகை வகையான படைப்புகளும்
தமிழின் தன்மையை தாங்கிடும்
ஏட்டுசுவடிகளும் எண்திசை பதிவுகளும் தாங்கிய கூடமே
தமிழர் வரலாற்றுத் தேட்டமே
நூலகப் படுகொலையாய்
நுண்ணறிவுப் பெட்டகமே
சிதைக்குள் சிதைந்த கணம்
சீரணிக்க முடியாது சிந்தையே வெந்தது
உலகையே உலுக்கிய
உணர்வின் கோரம் கல்வியின் அழிப்பே எதிரிக்குச் சாரம்
வலியால் துடித்தோம் வரலாறு புதைத்தோம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading