ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

உணர்வு

உணர்வு செல்வி நித்தியானந்தன்
உணர்வுகள் பலவுண்டு
உச்சக்கட்டம் ஆவதுண்டு
உளத்தால் தெளிவுகண்டு
உலகில் வாழ்தல் நன்று

மற்றவர் உணர்வை
மதிக்கா ஜென்மம்
மாக்களாய் நினைத்து
மிதிக்கும் வன்மம்

சாக்கடை சகதியில்
சல்லாபம் ஒருபுறம்
சாமிவேடம் தரித்து
சண்டித்தனம் மறுபுறம்

உணர்வை புரிந்து
தெளிவாய் வாழ்ந்து
உலகே போற்ற
உருப்படியாய் வாழ்

செல்வி நித்தியானந்தன்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading