உயிர்க்குமா சுவடுகள் ?

ரஜனி அன்ரன் (B.A) உயிர்க்குமா சுவடுகள் ? 21.08.2025

மண்ணுக்குள் புதைத்த துயரம்
மனிதப் பேரவலத்தின் எச்சம்
சாட்சியின் வித்தொன்று சாற்றுது உண்மைகளை
கனக்குதுமனசு கடக்குது காலம்
உயிர்க்குமா சுவடுகள் உரைக்குமா நீதியை?
௨ணர்த்துமா உண்மையின் தடயங்களை?

எச்சங்கள் கண்டுபிடிப்பு ஏராளம்
வெளிச்சத்திற்கு வந்ததுஆதாரம்
சின்னஞ்சிறிய எலும்புக்கூடு சிறியகாலணி
கனவினைச் சுமந்த புத்தகப்பை
கையோடு அணைத்த பொம்மை
தோண்டத் தோண்ட எச்சங்கள்
ஆண்டுகள் இருபத்தொன்பதும் கடந்ததே
மாண்டவர்தான் மீண்டு வருவாரா?

உடலங்கள் எரிக்கப்படும் மயானத்தில்
புதைகுழியில் புதைக்கப்பட்ட மர்மம்தான் என்ன?
எச்சங்களின் சாட்சியங்கள் தீர்வினைக் கொடுக்குமா?
நீதிதான் உதிர்க்குமா? நியாயம்தான் பிறக்குமா?
ஐ.நா.மன்றே பதில்சொல்லு ஐக்கியத்தை நியாயப்படுத்து !

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading