உறை பனி

ராணி சம்பந்தர்

வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த குளிரான
காற்றில் ஊதிப் பெருத்த பனித்துளி
வருத்தமுடன் கூறியது

எம் சிலருக்குப் பனி பிடித்திருக்கிறது
நையாண்டிப் பேச்சின் மனவலியிலே
பனித்துளி உறை பனியாய் ஊறியது
இதோ பார் பூப்போன்ற மென்மேனி
எங்கும் கொள்ளை அழகு மரங்களில்

பூப்போட்ட சேலை உடுத்த தேவதை
காட்சியிட எனை உருட்டி உருட்டிப்
பனி மனிதனாக்கி கரட் மூக்கும் ,
பொத்தான் கண்ணும் வைத்ததில்
நான் என்னையே மறந்த வலியே
துறந்து மன நிறைவில் உருகிய
உறை பனி ஆனேன் .

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading