ஒளியிலே தெரிவது

சக்தி சிறினிசங்கர்

தமிவ் மணம் கமழும் தேசத்தை நேசகத்த நெஞ்சங்கள்
கொஞ்சும் தமிழ் காக்கப் புறப்பட்ட வீரர்கள்
கனலிடை காற்றாய்ச் சென்றவர்கள்
தணலிடை வெந்த அக்கினிக் குஞ்சுகள்
புயலாகிப் புலியாகி புரட்சியின் ஒளியான புனிதர்கள்
ஒளிகொண்டு எழுந்திடுவர்
விழிநீர் மல்க வழிபடக் காத்திருப்போம்!
வளமான தேசம் அழகான தமிழீழம் அவர்களது கனவு ஒளிர்ந்திடும் தீபங்கள்!
நெஞ்சம் நெருப்பாகி நினைவு சுட்டெரிக்க
மண்ணுள்ளவரை மனங்களில் சுடர்விட்டெரியும்
மாவீரத் தெய்வங்கள்!

Nada Mohan
Author: Nada Mohan