04
Mar
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
26
Feb
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
இல 79
வரமாகும் வாய்ப்புகள்
வரமாகும் வாய்ப்புகள் வந்தால் வாழ்வில் வளம் பெருகும்...
ஒளியிலே தெரிவது
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-42
14-11-2024
ஒளியிலே தெரிவது…
ஒளியின்றி உலகமையாது
ஓய்வின்றி உடல் இயங்காது
வளமின்றி நிலம் அமையாது
வளியின்றி உயிர் வாழாது
கனவின்றி எம் இனம் பிறக்கவில்லை
கனவு பலிக்க பட்ட பாடு மறக்கவில்லை
உறவுகளை இழந்த கதை யாரறிவார்
ஊன்று கோலும் அற்றநிலை யார் புரிவார்?
வண்ண விளக்கு வீட்டில் எரிந்தாலும்
வரும் திரியின் வேதனை யாரறிவார்
எண்ணமெல்லாம் நிழலாய் தொடருது
என் மகனில் தெரியுது உன் சிரிப்பும் கூட
கண்ட கனவு பலிக்கட்டும் அண்ணனே..
காவியமே காந்தள் மாவீரச் செல்வங்களே
ஒளியிலே தெரிவது தங்கள் முகமே
ஒரு போதும் அணையாமல் ஒளிரனுமே
நம்பிக்கை ஒளியில் நடப்போம்
நாளை நமக்கொரு தேசம் கிடைக்கும்
கனவெல்லாம் நனவாகிப் போகும்
காலம் வெகு தூரமில்லை செல்வங்களே..
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...