ஓ’ முள்ளிவாய்க்காலே

வசந்தா ஜெகதீசன்
ஈர் எட்டாண்டாய் எரியும் நெருப்பு
ஈவிரக்கமற்றோர் செயலின் விதைப்பு
அடைக்கலமானோர் ஆகுதியானது

மறக்கத் தகுமா மனிதத்தின் கோரம்
மாண்டோர் உயிரின் கதறலின் கானம்
கண்ணீர் புகைக்குள் கருகி மடிந்தோர்
காயங்கள் சுமந்தே காணாமல் அழிந்தோர்

எண்ணற்ற வதைக்குள்
ஏதிலி வாழ்வு
வெந்தணலிட்டாலும் வேகாத நினைவு
முள்ளிவாய்க்கால் முற்றாகத் தகர்ந்தது
ஈழத்தின் தேசமே இரத்தமாய் பாய்ந்தது
ஈனர்கள் கொலையில் இருண்டது உலகு
வழிகளெங்குமே அவயத்தின் கூறு
பற்றியே எரியும் பாதையின் சுவடு

ஆண்டுகள் உருண்டாலும் அகலாத நெருப்பு
முள்ளிவாய்க்கால்
முற்றாகத் தகர்ப்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading