கணப்பொழுதில்…

வசந்தா ஜெகதீசன
நொடிக்குள் நொடியாய் நொடிந்ததே கனவு
நொடிப் பொழுதில் அகோர நினைவு
ஏக்கத்தில் இன்னமும் இருட்டு
எப்படி நிகழ்ந்தது விபத்து
பற்பல கனவுடன் பறந்திட்ட உறவுகள்
பாதியில் வீழ்ந்த இடியாய் தகர்ப்பு
சுற்றுச் சூழலே சுக்குநூறானதே
மருத்துவ மாணவர் மாண்டிட நேர்ந்தது
இறப்பின் துடிப்பே வதையின் ரணமாய்
இதுபோல் வேண்டாம் இன்னலின் துயர்கள்
கதறும் உறவுகள் கண்ணீர் அவலம்
பணியாளர் பணியும் பரிதாப இழப்பு
நினைக்க முடியாத நிமிடத்தின் தகர்ப்பு
உயிரின் வதையே உலகை உலுக்குது
உறவுகள் கதறல் உளத்தையே வாட்டுது
நிகழ்ந்த கணமே நிஜமா கனவா
கணப்பொழுதே காலக்கணக்கு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading