கணப்பொழுதில்..

வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
சுவிஷ்..

கணப்பொழுதிலே..

எத்தனை கனவுகள் மனத்திடை
எண்ணங்கள் வான் வழி பறக்க
கட்டுப்படுத்த முடியா ஆசைகள்
கணக்கற்ற ஆவலும் அணைகடக்கும்..

அழகான ஓவியமாய் வாழ்க்கை
வண்ணம் வரையும் நம்பிக்கை
வரைகள் போல உயரும் நட்புகள்
ஆகாயம் முட்டும் கற்பனைகள்..

எப்போ எப்படி எது நிகழும்
புதிர் போடும் காலங்கள் அது
புன்னகை மாறாத முகங்களிலும்
பூத்துக் கிடக்கும் மரண ரேகை..

அழிவின் விழிம்பில் மனித இனம்
இயற்கை பாதி செயற்கை மீதி
போரில் பாதி போக்குவரத்தில் மீதி
கணப்பொழுதில் மாறுது தலை விதி..
சிவதர்சனி இராகவன்
19/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading