கணப்பொழுதில்…

ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்…… 19.06.2025

சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை
சுக்குநூறாகியதே கணப்பொழுதில்
தொடங்கும் போதே முற்றுப்புள்ளி
முடங்கியதே கனவுலகம் கண்முன்னே
இதயத்தைப் பிழிகிறது சோகம்
உலகே நடுக்கத்தில் மீளவில்லை இன்னும் !

ஒவ்வொரு உயிர்களுக்கும் பின்னால்
இதயத்தைப் பிழியும் துயரக்கதைகள்
கற்பனைகளைச் சுமந்தபடி கனவுகளில் மிதந்தபடி
கட்டியணைத்து உறவுகளுக்கு விடைகொடுத்தபடி
எதிர்காலம் நோக்கி தொடர்ந்தபயணம்
புதிராக நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறியதே !

கணப்பொழுதில் கண்ணிமைக்கும் நொடியில்
அரங்கேறிய அவலங்கள் ஆறவில்லை இன்னும்
பயணிகளின் பயணங்கள் கனவாகிப்போக
கருகிப் போனது உடலங்கள்
அடையாளம் காணமுடியாத சோகம்
ஆறாத்துயரத்தில் உறவுகளும்
அத்தனையும் கணப்பொழுதில்……..

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading