கணப்பொழுது

செல்வி நித்தியானந்தன்
கணப்பொழுது (719)

கண்மூடி முழிப்பதற்குள்
எத்தனை அழிவுகள்
கண்ணெதிரே உயிர்கள்
எரியுண்ட ரணங்கள்

பற்பல நினைவுடனே
பறந்த உறவுகள்
பரிதாப விபத்தாலே
சிதறிய உடலங்கள்

இத்தனை இழப்பும்
கணப்பொழுதின் சோகம்
எரியுண்ட உடல்களும்
சிதறிய வேகம்

விதிஇதுவென மதியை
நோகத்தான் முடியுமா
சதிதான் இதுவென்று
இறைவனுக்கு தெரியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading