கனத்த கார்த்திகை

ரஜனி அன்ரன் (B.A) “ கனத்த கார்த்திகை “ 06.11.2025

கனத்தமாதம் கண்களில்நீரும் பனித்திடும் மாதம்
மனதினைத் தைத்திடும் மாதம்
மாவீரர்களை நெஞ்சினில் நினைத்திடும் மாதம்
கார்கால மழையும் பொழிந்திடும் காலம்
காற்றும் பலமாய் வீசிடும் காலம்
கடலலையும் பொங்கிடும் நேரம் !

மண்ணின் வாசமும் மனதை வருட
இது ஒளியின் திருநாள் அல்ல
ஒளியாகி நின்ற உயிர்களின் திருநாளை
உணர்த்தி நிற்கும் கனத்த மாதம்
உன்னதர்களுக்காக உணர்வோடு
தீபமேற்றிடும் திருக்கார்த்திகை மாதம் !

கனத்த கார்த்திகை திருநாள் அல்ல அதுசபதமே
ஒளியினால் எழுதப்பட்ட வலி
வலியின் இரணத்தினால் பிறந்திட்ட ஒளி
மாவீரர்களின் மெளன காவியம் !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading