கற்றலின் படியே காசினி உயர்வே

இரா.விஜயகௌரி வித்தகப் பொறிமுறை விரல் வழிஎழுத-சித்திர வாழ்வின் செழிப்பின் தொடரை கற்றலின் படியே காசினி எழுதும் கொற்றவை தொட்டிடும் கற்றவன்...

Continue reading

கற்றலின் படியே காசினி உயர்வே!

நகுலா சிவநாதன் கற்றலின் படியே காசினி உயர்வே! கற்றலின் பேறு பெற்றதன் நன்மை உற்றுக் கேட்டலில் உணருமே உலகு சுற்றமும்...

Continue reading

கற்றலின் படியே காசினி உயர்வே..

வசந்தா ஜெகதீசன் காலவருடல் ஒளியாகும் கல்வி விளக்கு அறிவாகும் ஞாலத்திரையின் நல்லொளியாய் நாளும் கற்கும் பட்டறிவாய் பேறுகள் நிறைந்த தன்னிறைவாய் பெற்றிடும்...

Continue reading

கற்றலின் படியே காசினி உயர்வே!

நகுலா சிவநாதன்
கற்றலின் படியே காசினி உயர்வே!

கற்றலின் பேறு
பெற்றதன் நன்மை
உற்றுக் கேட்டலில்
உணருமே உலகு

சுற்றமும் போற்றும்
சுந்தர அழகும்
நற்றுணையாக
நன்றே மிளிரும்

கற்றலின் படியே
காசினி உயர்வே
பொற்பத வாழ்வும்
போற்றிட உயரும்

கற்றலில் மட்டும்
காசினி உயர்வா?
பட்டறிவு அனுபவமும்
பாரிலே உயர்த்திவிடுமே!?

கற்ற உலகே கனிவு வாழ்வு
சுற்றம் போற்றும் சுடர்மிகு எழிலே
முற்றும் மனிதன் முழுமை பெற
கற்ற அறிவே கணணி உலகில் வேண்டும்

நகுலா சிவநாதன்1879

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading