கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு–
எதிர்ப்பு அலை

சின்ன வயதெனக்கு சினந்து கண்ணீர்விட்டு அன்னை தேசம்மறந்து ஆழ்கடல் பயணப்பட்டு உன்னத உறவினை உயிருடன் காணாது புன்னகை இழந்து புண்ணியதேசம் தொலைத்தேன்

எண்ணத்தில் எண்ணற்ற
எதிர்ப்புஅலை துடித்தேன்
வண்ண வாழ்வை வழியற்று இழந்தேன் எங்கு சென்றினும்
என்பெயர் அகதி
பங்கு பெற்றினும்
பதவியும் இல்லை

தாயகம் திரும்பிட தாயார் யாரென்றிட காயம்பட்ட இதயமாய் கண்ணீர் எதிர்ப்புஅலை
சட்டவிரோத குடியேறியென சரித்திரம்கூற
எதிர்ப்பு அலை
திட்டம் திருப்பம்
தீர்வதருமா நீதிஅலை

எம்இனத்திற்கு
ஓருரிமை
எங்கு தீர்வாகுமோ
நம்சட்டத்திருத்த உரிமைக்குரல்
நமதென உலகாளுமோ
எங்கு நோக்கினும்
எம்மினத்திற்கு எதிர்ப்புஅலை
தங்கும் இடமொன்றே
தலைவிதி தந்தமடி

🙏🏻 நன்றி வணக்கம்🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading