“கல்லறைகள் திறக்கும் “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211

“கல்லறை திறக்கும் ”

கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை மைந்தர்கள்!

மண்ணுக்கு
விதையாகி
முத்தாகி சொத்தாகிய
சொந்தங்கள்
கல்லறை திறக்கும்!

கல்லறைகள்
கதை சொல்லும்
காவியநாயகர் எழுவார்கள்
நெஞ்சமதில்
நினைவாக
நித்தம் நித்தம் ஏங்குகின்றோம்!

கல்லறை
திறந்து
கதை சொல்லிடும்
ஏக்கத்தில் எதிரியானவன்
விதைக்கப்பட்ட கல்லறைகள்
அழிக்கப்பட்டன!

மண்ணுக்காக மடிந்தீர்கள்
மக்களுக்காக உயிர் நீத்தீர்கள்
நீங்காத நினைவில்!

நாம் வருவோம்
நீங்கள் எழுவீர்கள் எங்கே எங்கே
ஒரு முறை உங்கள் திருமுகம் காட்டி
மறுபடி உறங்குங்கள் !

நன்றியுடன் 🙏

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading