கவிதை நேரம்-11.04.2024 கவி இலக்கம்-1854 பூக்களின் பூ வசந்தம் ——————–

கவிதை நேரம்-11.04.2024
கவி இலக்கம்-1854
பூக்களின் பூ வசந்தம்
——————–
நாம் வாழும் இவ் பூமிதனில்
நாம் காணும் மரம் செடி கொடிகள்
அழகு செய்ய பகலவன் அழகழகாக
மன ரம்மியாக படைத்தளித்தவன்
உதயத்தில் கிழக்கை நோக்க
மெல்ல சிவக்கிறது கிழக்கு வானம்
தொடுவானம் கிழித்து வரவே
சீறிப் பாய்கின்ற ஒளிச் சுடர்கள்
முழு இரவும் பனி குளித்த மரங்கள்
உயிர்க்க துடிக்கும் துளிர்கள்
துளிர்க்கும் தளிர்கள் கிளம்ப
பிரசவ வேதனையுறும் மொட்டுக்கள்
உச்சிக் கொப்பில் மொட்டு பூக்களாய்
மலர்ந்து சிரிக்கின்ற வர்ண ரோஜா பூக்கள்
வர்ணம் தீட்டி அழகு செய்தது போல்
கனி தரும் மரங்கள் பூக்கள் வசந்தமாய்
இப்படி எத்தனையோ கோடான கோடி பூக்கள்
பார்த்து பார்த்து அழகை ரசித்து நின்றேன்

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading