கார்த்திகை இருபத்தியேழு…

வசந்தா ஜெகதீசன்
கார்த்திகை இருபத்தியேழு…
கணதியின் ரணமாய்
கங்கையில் விழியாய்
கோரமே நினைவாய்
கொன்றழிப்புகள் நிதமாய்
வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே

கார்த்திகை இருபத்தியேழு காரிருள் ஒளியில்
மெளனத்தின் மொழியில்
மறவர்கள் குரல்கள்
எரிமலைக் குமுறலாய்
எங்களின் இதயம்
ரணமென வெடிக்குமே
எண்ணற்ற தாய்மார் கதறலின் ஓலியில்
காந்தள் மலரே குருதியில் உறையும்
கல்லறை எங்கும் கதறும் ஓலம்
அன்றைய அவலத்தின் அகோர தேசம்
கண்முன் கங்கையாய் பெருகும் காணிக்கை விழியே
மறவர்கள் வீரத்தின் மங்காப் பெருமை!
நன்றி

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading