05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
கீத்தா பரமானந்தன்
சுடர்!
படர்கின்ற இருளைப்
பகலொளி ஆக்கப்
பதமொடு வந்தே
பரவிடும் இன்பம்!
சிரமங்கள் விலக்கிச்
சிந்திடும் ஞானம்
உரமதைப் பகரும்
உள்ளத்தில் நாளும்!
பேதங்கள் அகற்றப்
புறப்பட்ட நேசம்
சாவிலும் நின்றே
சரித்திரம் பகரும்!
அறமதும் கூடும்
அறிவியல் நாடும்
விரவிடும் சுடரென
விரட்டிடும் மூடம்!
தீபத்தின் சுடராய்த்
தீமைகள் பொசுங்கும்
அறிவதன் சுடரில்
அகிலமும் பணியும்
கற்றலிற் பற்றினில்
கனன்றிடும் முனைப்பினில்
காலமும் மின்னுவோம்
கனிந்திடும் சுடராய்!
கீத்தா பரமானந்தன்
10-04-2023
இருளெனும் மாய
இடரினைப் போக்கி
இயக்கிடும் ஞானம்
சுடரொளி யாகும்!
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...