குடும்பமெனும் சோலை

ரஜனி அன்ரன் (B.A) “குடும்பமெனும் சோலை“ 15.05.2025

குடும்பமென்பது சோலைவனம் – அங்கு
குதூகலம் வருமே தினம் தினம்
அமைதி தங்குமிடம் ஆரவாரம் பொங்குமிடம்
அன்பு விளையுமிடம் குடும்பமே
குடும்பமெனும் சோலையை வனப்பாக்க
குதூகலமாய் தந்ததே ஐ.நா.மன்றும்
குடும்பதினமாக வைகாசி பதினைந்தினை !

ஆலமர விழுதாக ஆணிவேராக
தலைமுறைகள் தழைக்கின்ற தளமாக
உறவுகளை இணைத்திடும் பாலமாக
உணர்வுகள் பொங்கிடும் மாடமாக
பிறவிப் பெருங்கடலின் தெப்பமாக
பிறப்பின் மகத்துவமாகுமே குடும்பமும் !

கட்டுக்கோப்பும் விட்டுக் கொடுப்பும்
இட்டுச் செல்லுமே நல்வாழ்விற்கு
உள்ளத்தின் அமைதி இல்லத்தில் தான்
இல்லத்தை அழகூட்டுவது குடும்பமே
குடும்பமெனும் சோலை என்றும் நந்தவனமே !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading