மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

குமுதினி படுகொலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025

நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்
நெஞ்சிலிருந்து அகலாத வலியிது
குமுதினி குருதியில் குழைந்த நாளது!

மாவிலியின் நெடுந்தீவு துறைமுகத்தில் உதிரத்தை உறைய வைத்த செய்தி
பசுந்தீவின் வாசிகளையும்
பச்சை மழலைகளையும் பரிதாபக் கதறலுடன்

குத்திப்படுகொலை குமுதினி படுகொலை
குதிரைகளும் பசுக்களும்
குமுறி மார்பிலடித்து கூக்குரலிட
கடலலை சிவந்து கண்ணீரில் நனைய.

பனைமரமும் தென்னைமரமும்
பரதவித்து கடலைப் பார்த்தழுத நாளிது.
பாவிகளாய் என்னூர் மக்கள்
பரிதவித்த அழுகுரல் எத்திசையும் இந்நாளிலே…15.05.1985.

Jeba Sri
Author: Jeba Sri