கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
ஈரம்
———-
ஈரமில்லா நெஞ்சம்
எப்படி இரங்கும்
பாசமில்லா மனிதர்
பயணிக்கும் படகுல்
ஈரமுள்ளவர்களை ஏற்றலாமோ
ஏற்றினால் என்னதான் நடக்கும்
சிந்திக்க வேண்டிய விடயம்
சில மனிதம் இருப்பதால் தான்
இன்னும் உணர்வுகள் மதிக்கப் படுகின்றது
கடல் போல சொத்திருந்தும்
கப்பல் போல் வீடிருந்தும்
கைப்பிடியில் வசதி இருந்தும
கையறுந்த நிலையில்
அல்லவா நிற்க வேண்டி யுள்ளது
பசி பட்டினி பார்த்தும்
வெள்ளம் பெருக்கில்
மக்கள். அவலம்
பார்த்தும்
இரங்காத ஈரமற்றவர்கள்
இனி என்ன செய்வார்கள்
ஈரமுள்ள மண்ணில்
விளைந்த பொருட்கள
நல்லதாகவே இருக்கும்.
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading