கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
இதயம்
———-
இதயம் யாரிடம் இருக்கிறது
இன்றுலகில் இதயமற்ற செயலால்
எத்தனை எத்தனை கொடுமைகள்
அத்தனையும் நல்ல இதயமற்ற செயலே
இதயம் சுத்தமாக இருக்க வேண்டும்
உடம்பில் நோய் வராது சித்தரின் வாக்கு
இதய வால்வுகளில் கொழுப்பு படிந்தால் அடைப்பு ஏற்படும்
இதயத்திற்கு செல்லும் குருதியின்
நிலைப்பாட்டில் இடர்ஏற்படும்
இரத்தக் குழாய்களில் ஏற்படும்
அடைப்பால்
ஒட்சிசனும் காணாது இருக்கும்
மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும்
அதனால் நிறைய பிரச்சனைகள்
உடம்பில் ஏற்படும்
இதுவே மனிதருக்கு யமனாக மாறும்
ஒருவரின் இதயம் அவரது கையைப்
பொத்தினால் இருக்கும் அளவு பருமன்தான்
இந்தளவு இதயத்திற்குள் தான்
எத்தனை வேலைகள்
இதெல்லாம் கடவுளின்
சிருஷ்டியின் மகிமை
இதைக் கண்டுபிடித்த
அறிவாளிகளின் மேன்மை
இதயத்தை ஒழுங்காக பராமரியுங்கள்
நல்ல இதயத்தோடு வாழுங்கள்!
கவனித்தும் இதயத்தை இழந்தவள் நான்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
15.12.24

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading