அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
ஆக்கம் 164

அடைவு

காலை எழுந்ததும்
அன்றைய கேள்வி
மூன்று வேளைக்கும்
உணவு வாங்கணுமே !

கடன் கேட்டு
பல் இளிக்க
பல பேரிடம்
போய் கேட்க
மனமேனோ
சம்மதிக்கவில்லை !

என் பிரச்சனையை
நானே தீர்க்க
எளிய வழி
உள்ள மோதிரத்தை
அடைவு வைப்பதுதான் !

வட்டி குட்டி போட
குட்டி வட்டி போட
முதலை மீட்க முடியாது
மாண்டதே மோதிரம் !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan