சக்தி சக்திதாசன்

பாமுகம் என்றொரு சோலையிலெ
பூமுகமாய் சந்தங்கள் சிந்திடும்
பொன்னான கணங்கள் சேர்ந்து
பொங்கிடும்.கவிதைப் பொங்கலை

உள்ளத்தில் ஊறிடும் உணர்வுகளை
உரத்தே கூவிட ஒருகளத்தினை
உருவாக்கிக் கொடுத்திட்ட பாமுகம்
உன்னதமாய் இங்கு துலங்குது

தமிழன்னை ஈந்திட்ட வாரிசுகள்
தம்பி நடா மோகன், தங்கை வாணி
தங்கக் கவிஞர் பாவை ஜெயபாலனார்
தரம்கண்டு வியந்திங்கு மகிழ்கிறேன்

பூமாலையில் மலர்களைச் சேர்ப்பதுபோல்
பாமுகத்தில் எத்தனை நிகழ்வுகள்
வந்திங்கு அடைந்தது ஒருசாதனை
வரவேண்டும் மேலும்பல வெற்றிகள்

பங்களிக்கும் சோதர, சோதரியர்
பாடிடும் சந்தங்கள் மிளிர்கின்றன
பாவலர் அனைவர்க்கும் வாழ்த்துகள்
பாசத்துடன் பொழிந்திடும் வேளையிது

Nada Mohan
Author: Nada Mohan