அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

வாழ்க்கைக்கு பணியாகும்
சேவைக்கு பணியாகும்
ஆளுமைக்கு பணியாகும்
அனைத்துக்கும் பணியாகும்

பணியின்றி ஜகமில்லை
பணியின்றி நலமில்லை
பணியின்றி உணவில்லை
பணியின்றிப் பலனில்லை

பணியாலே ஜெயமுண்டு
பணியாலே சிறப்புண்டு
பணிகண்டு பயமுண்டு
பணியின்றி எதுவுண்டு ?

நிலமடந்தை பணியாலே
நிறைந்திடும் வளங்களே
வான்மகளின் பணியாலே
வளர்ச்சியுறும் இயற்கையே
பணி
பணிக்காகவோர் கவிதை
படைத்திடுமோர் பணி
பாரினிலே பலபணிகள்
பாவினிலே ஒலிக்கிறது

Nada Mohan
Author: Nada Mohan