சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு.
பணம். “கடை நடத்தி இராப்பகலாய் உழைத்த காசு
கஷ்டப்பட்டு குடும்பமாய்
சேர்த்த காசு
உரிய வரி கட்டாமல்
விற்ற காசை
ஒளித்துக் காட்டி என் பேரன் சே்த்த ரொக்கம்
ஒரு லட்சம் வரையான நோட்டுக் கட்டை
உருட்டி ஒரு பாசலாய் ஒளித்து வைத்தான்
இதை தெரிந்த எவரோ எம்
உறவுக்கு காரர்
இல்லாத நேரம் பார்த்து எடுத்துப் போட்டார்.

பொலீசில் ஒரு முறைப்பாடு செய்யத் தன்னும்
போகேல கட்டம் பணம் வந்த பாதை
எது எந்த வழி உழைப்பு கணக்கை சொல்ல
இயலாத் கட்டம் அவன் சோர்ந்து போனான்
பழைய ஒரு வீட்டை வாங்கி
புதுக்கி கட்ட
பயன்படும் என்றெண்ணித்தான்
சேர்த்தான் காசு
இதை எண்ணி ஏங்கியதால் வருத்தங்கூடி
இருந்த கடை வியாபாரம் படுத்துப்போச்சு
பணத்தாசை கூடியதால்
எல்லாம் போச்சு
பணியோணும் சட்டத்துக்கு பாடம் ஆச்சு.
சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

    Continue reading