தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரூப்ன் சர்வேஸ்வரி

கவி அழகு
ஃஃஃஃஃஃஃ

கவியழகு கருத்தாய் புனைவதழகு நன்றாய் //
உணர்வதழகு உருப்படி சேர்ப்பதழகு எங்கும்//
துலங்குவதழகு இலங்கியே நிற்பதழகு பாராய் //
படரும் கொத்துப்பூவழகு இரசிக்கும் கண்ணழகு //
மின்னிப்பூச்சியழகு மிகையான நிலவழகு //
மின்னும் பொன்னழகு மிதக்கும் கப்பலழகு //
கற்பனை விரியும் போதழகு புலரும் //
காலையுமழகு பூவிரிவதும் மணம்பரப்பலும் அழகே //
கண்ணிய மனவழகு கருத்தாய் செப்பழகு //
மானிலத்தில் மழலையழகு அணைக்கும் போதிலே //
ஆனந்தமழகு இயற்கையை இரசிப்பவன் எண்ணமும் அழகே //
கற்பனையே கவியும் வடிப்பதே கவியழகும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading