அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சுனாமி பேரலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-45
26-12-2024

சுனாமி பேரலை

இருபது வருடமானாலும்
இதயம் மறக்குமா
இழப்பின் வலியை
இமைக்கும் நொடியில்

காலனாய் மாறி
கண்மணிகளைக் காவினாய்
கதறல் கேட்கலையா
கடலே உனக்கு!

தரங்கம்பாடி நீயெனவும்
தருவாய் உணவெனவும்
நத்தார் களிப்பிலிருக்க
நாசமானதே மொத்தமும்

ஆழிப் பேரலையே
அள்ளிச் சென்றவரை
அடையாளம் காட்ட
அவள்தாயை காணோம்!

எத்தனை இழப்பு
எம்இனம் கொள்ள
நித்தமும் அமைதியேனோ
நீ மொத்தமாய் பதில்தா!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading