செம்மணி

ரஜனி அன்ரன் “ செம்மணி “ (B.A) 10.07.2025

செம்மணல் சூழ்ந்தநிலம்
செங்குருதியால் செம்மணியானதுவோ
உலகின் எட்டாவது அதிசயம்
அவலங்களின் அதிசயம் செம்மணி
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு
வதையுண்டு சிதையுண்டு வயதுவேறுபாடின்றி
புதைக்கப்பட்டனரே உறவுகள் செம்மணியில் !

மண்ணிற்குள் மூடியகனவுகள்
மெளனக் குரல்கள் நிறைந்தகாற்று
மெளனிக்கப் பட்டதே செம்மணிக்குள்
காலங்கள்கடந்தும் காலத்தின் கட்டாயத்தில்
புதைகுழிகள் தோண்டப்பட்டு
எச்சங்கள் எண்ணிக்கையின்றி
எடுக்கப்படுகிறது ஆய்வாளர்களால் !

செம்மணி புதைகுழி மட்டுமல்ல
நூற்றாண்டு மூடியபுத்தகம்
குழந்தையின் சிரிப்பு ஒருபக்கம்
தாயின் அழுகுரல் மறுபக்கமென
மண்ணின்மார்பில் புதைந்துவிட்ட
மன்னுயிர்களின் மனசாட்சி பேசுகிறதே
மழையால் பொலிவுற்ற செம்மணி
கண்ணீரால் நனைகிறதே இப்போது !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading