தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
ஜெயம் தங்கராஜா
சசிச
காதல் காதல்
சொல்லத் துடிக்கும் உதடுகளும் சொல்லாமலிருக்கும்
சொல்லாமலே இதயம் காதலைப் பருகும்
மொழியும் இங்கே மவுனம் காத்திடும்
விழிகளின் பேச்சால் காதலும் பூத்திடும்
இவன் அவளுக்குள் தொலையாமல் தொலைவான்
அவள் இவனுக்குள் தொலையாமல் தொலைவாள்
இதயங்கள் ஒன்றையொன்று இடமாற்றம் நிகழும்
உதயமாம் காதலில் இரவில்லாப் பகலும்
மனம் பூஞ்சோலையாக பட்டாம்பூச்சிகள் பறக்கும்
கணம் ஒவ்வொன்றும் சுகங்களை நிறைக்கும்
பேசுவது கிளியாவென இவன் சொல்ல
கூசவும் இவள் தலைகுனிவாள் மெல்ல
எத்தனை சொந்தங்களிருந்தும் விரும்பிய சொந்தமாம்
சித்தமும் மீட்டிடும் காதலின் சந்தமா ம்
அவளுக்கு பிடிக்காததை இவனோ தவிர்ப்பான்
அவளும் அவனின் அருகாமைக்காய் தவிப்பாள்
சீவனுக்குள் சீவன் செருகிவிடும் புதுமை
நாவதனில் கொஞ்சுகின்ற மொழியூட்டும் இனிமை
இந்நொடி நீளாதோ என்கின்ற தன்மை
வந்துவிடும் காதலித்தால் அனுபவித்த உண்மை
ஜெயம்
10-02-2025
