துளிர்ப்பாகும் வசந்தமே…
துளிர்ப்பாகும் வசந்தம்
ஜெயம் தங்கராஜா
ச. சி. ச.
முகமூடி
எத்தனை எத்தனை முகமூடி முகங்கள்
சுத்தமே இல்லாத அழுக்கான அகங்கள்
முகமா முகமூடியாவென தெரியாத தன்மை
அகப்படும் வரையில் தெரியாதிந்த உண்மை
அரசியல்வாதிகள் போடுவார் எடுப்பான முகமூடி
பரம்பரைக்கும் சொத்தை சேர்த்திடுவார் ஓடி
வியாபாரிகள் அணிவார்கள் விசித்திரமான முகமூடி
நியாயவாதிகள் தாமேயென தமக்குத்தாமே பேர்சூடி
இவரும் தன்முகத்தை வாழ்க்கைக்குள் பாவிக்கவில்லை
அவரும் சரியாக முகத்தை உபயோகிக்கவில்லை
களற்றப்படாத அளவுக்கு முகமூடிகளின் இறுக்கம்
அளவுகள் பொருந்தியே மெய்போன்றே இருக்கும்
ஒருவரின் மெய்முகம் அறியவே முடியாது
இருப்பது எதுவென ஊனக்கண்ணுக்கும் தெரியாது
விதம்விதமாய் முகமூடிகளை ஒருசிலரே அணிவார்கள்
பொதுவாகவே இவர்கள் தவறுக்குத் துணிவார்கள்
உறவுக்களின் முகமூடி மறுமுகமென மாட்டாது
மறந்துங்கூட மெய்முகம் தன்னை வெளிக்காட்டாது
உலகிலே எல்லாமே போலியென்றே ஆனது
பழகிப் பார்த்துங்கூட தெரியாமலே போனது
ஜெயம்
18-02-2025
