பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 633

உயிர்நேயம்

போனதெங்கே மனிதநேயம் மனிதன் மாறிவிட்டான்
அன்பை அறிமுகப்படுத்த மனிதன் மறந்துவிட்டானா
காணவிரும்பாது அடுத்தவர் வலிகளை என்று
தன் உணர்வுகளைத் தூங்க வைத்துவிடட்டானா
வானம் பொழியா கட்டாந்தரை பூமியாக
நேயத்தில் ஏன்தானோ பாலைவன வறட்சி
ஆனதென்னவோ உயிருடன் கலந்த நற்பண்பிற்கு
கையேந்துபவர்கள் அதிகரிக்குமளவிற்கு மனிதத்தில் பற்றாக்குறை

மண்ணில் தொலைந்த மனிதத்தைத் தேடுகிறார்
பிறர் மட்டுமே முதலிலே மாறவேண்டுமென
தன்னில் தொலைந்த நேயத்தை விட்டுவிட்டார்
அவரே தூக்கியெறிந்துவிட்டதை அவர் அறிவாரோ
நின்றுபோகும் ஒருநாள் நிலையில்லா வாழ்வு
மூச்சு உள்ளவரை பகிர்ந்துண்பவன் இறைவன்
என்று விழித்தெழுவாரோ ஒன்றுபட்ட வாழ்விற்காக
அன்றே மனக்குழியிலிருந்து அருள் வெளிவரும்

இதயத்தில் இரக்கம் இயங்காது உறங்கிவிட்டால்
உயிருமில்லா உணர்வுமில்லா கல்லிற்குச் சமம்
உதவும் நிலையில் இருந்துங்ககூட உதவாவிட்டால்
அது நாட்டிற்குள் நடமாடினும் காட்டுத்தன்மை
மதங்களும் அவைகளை கடைப்பிடிப்போரும் கோடானகோடி
இருந்தும் மனிதாபிமானம் போனது எங்கோடி
எதனால் இதுநாள்வரை மனங்கசியும் பழக்கமில்லை
உயிர்நேயம் அறிவிற்குள் வற்றிப்போய்விட்டதென்று பொருள்

ஜெயம்
08-12-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading